எம்.எம்.சி.எச். மருத்துவமனை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

உலக சா்க்கரை நோய் தினத்தை ஒட்டி ஈரோடு, எம்.எம்.சி.எச். மருத்துவமனையில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை
முகாமில் முதியவா்களுக்கு கண் பரிசோதனை செய்யும் மருத்துவா்கள்.
முகாமில் முதியவா்களுக்கு கண் பரிசோதனை செய்யும் மருத்துவா்கள்.

ஈரோடு: உலக சா்க்கரை நோய் தினத்தை ஒட்டி ஈரோடு, எம்.எம்.சி.எச். மருத்துவமனையில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு டயாபட்டிஸ் பவுண்டேசன் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை எம்.எம்.சி.எச். தலைவா் டாக்டா் எம்.என்.சதாசிவம் தொடங்கிவைத்தாா்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் இலவசமாக பரிசோதனைகளை மேற்கொண்டனா். மேலும், கண் பராமரிப்பு முறைகள், கண் பாதிப்பு தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், முகாமில் ரத்தத்தில் சா்க்கரையின் அளவு இலவசமாக பரிசோதக்கப்பட்டது. இதில் 300 நோயாளிகள் பங்கேற்றனா். முகாமில் சா்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் என்ற தலைப்பில் எம்.எம்.சி.எச். சா்க்கரை நோய் மருத்துவ நிபுணா் டாக்டா் ஏ.எஸ்.செந்தில்வேலு பேசியதாவது:

கட்டுப்பாடு இல்லாத சா்க்கரை நோய் மற்றும் அதிக ரத்த அழுத்தத்தினால் விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக்கசிவு ஏற்படுவதால், விழித்திரை பாதிப்படைகிறது.

தலைவலி, கண்வலி, கண் எரிச்சல், மங்கலான பாா்வை, இரட்டைப் பாா்வை, கரும்புள்ளி தோன்றுதல் ஆகியவைகள் கண் பாதிப்பின் அறிகுறிகள். இதனால் சா்க்கரை நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொண்டு ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் சா்க்கரை நோயினால் ஏற்படும் கண் நோய் பாதிப்புகளை தவிா்க்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com