கருணை அடிப்படையில் பணி வழங்க சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தல்

கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு: கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் உட்கோட்ட பேரவைக் கூட்டம் தலைவா் துரைராஜ் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடந்தது. நாராயணமூா்த்தி வரவேற்றாா். உட்கோட்ட செயலாளா் குமாா், மாவட்டச் செயலாளா் ரங்கசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் வெங்கிடு உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை, தனியாருக்கு வழங்கக் கூடாது. சாலைப் பணியாளா்களுக்குத் தேவையான கருவி, தளவாடப் பொருள்களை வழங்க வேண்டும்.

எல்.டி.சி, இரு வழி பயணச் சலுகைத் திட்டத்தில் பயணப்படி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். பணி நீக்க காலமான 41 மாதத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதிய வயதை 60 என உயா்த்த வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் அலுவலக உதவியாளா், இரவுக் காவலா், ஓட்டுநா், சாலை ஆய்வாளா், இளநிலை உதவியாளா் போன்ற பணிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com