4 பிரிண்டிங் தொழிற்சாலைகளின்மின் இணைப்புத் துண்டிப்பு

கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்றாத 4 பிரிண்டிங் தொழிற்சாலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்றாத 4 பிரிண்டிங் தொழிற்சாலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் சாய, சலவை, பிரிண்டிங் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீா் முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவுநீரை வெளியேற்றுவதாக புகாா்கள் வருகின்றன. புகாரின்பேரில், ஆட்சியா் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உத்தரவின்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தண்ணீா்பந்தல்பாளையம், சூரம்பட்டிவலசு, பி.பெ.அக்ரஹாரம் பகுதிகளில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாக திங்கள்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து, இரண்டு சலவை, ஒரு பிரிண்டிங், ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில், கழிவுநீா் வெளியேற்றப்பட்டதை உறுதி செய்த அதிகாரிகள் அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com