சென்னிமலை ஒன்றியத்தில் கிராம ஊராட்சி ஒதுக்கீடு விவரம்

சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் யாா் போட்டியிடலாம் என்பதற்கான ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் யாா் போட்டியிடலாம் என்பதற்கான ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் எனும் நிலையில் தோ்தல் கமிஷன் ஒதுக்கீடு பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகள் தலைவா் பதவி எந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, கொடுமணல், ஈங்கூா் தாழ்த்தப்பட்டோா் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முகாசிபுலவன்பாளையம், கவுண்டச்சிபாளையம் தாழ்த்தப்பட்டோா் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூத்தம்பாளையம், முருங்கத்தொழுவு, ஓட்டப்பாறை, பனியம்பள்ளி, புங்கம்பாடி, புன்செய் பாலத்தொழுவு, சிறுகழஞ்சி, வடமுகம் வெள்ளோடு, வாய்ப்பாடி பஞ்சாயத்துகள் பொது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுவபட்டி, எல்லைக் கிராமம், குமாராவலசு, குப்புச்சிபாளையம், குட்டப்பாளையம், முகாசிபிடாரியூா், புதுப்பாளையம், வரப்பாளையம், எக்கட்டாம்பாளையம் பொது வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com