ஈரோடு மாவட்டத்தில் 2000 டன் யூரியா இருப்பு
By DIN | Published on : 25th November 2019 09:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமாா் 2,000 டன் அளவுக்கு யூரியா இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
வட கிழக்குப் பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு யூரியா உரம் தங்கு தடையின்றி கிடைக்க தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின், ஈரோடு மண்டல அலுவலகம் மூலமாக 1,998.995 டன் யூரியா விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,500 டன் யூரியா ஈரோடு மாவட்டத்துக்கு வரவுள்ளது.
இவை அனைத்தும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படவுள்ளது. எனவே விவசாயிகள் தேவையான உரத்தினை பெற்றுப் பயனடையலாம் என்றாா்.