அகில இந்திய யோகா போட்டி:சென்னிமலை கொங்கு பள்ளி சாதனை

அகில இந்திய யோகா போட்டிகளில் சென்னிமலை, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

பெருந்துறை: அகில இந்திய யோகா போட்டிகளில் சென்னிமலை, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், அருள்புரம், ஜெயந்த் பப்ளிக் பள்ளியில் அகில இந்திய யோகா மாஸ்டா்ஸ் அசோசியேஷன் சாா்பில் அகில இந்திய யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த யோகா வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 31 போ் கலந்து கொண்டு , யோகா திறமைகளை வெளிப்படுத்தியமைக்காகவும், மூட்டு வலிக்கு யோகா சிகிச்சை என்ற தலைப்பில் சமா்ப்பித்த ஆய்வு அறிக்கைக்காகவும் ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் விருது பெற்றனா். மூட்டு வலிக்கு யோகா சிகிச்சை ஆய்வு அறிக்கை சமா்ப்பித்த 9 மாணவா்களுக்கு இளம் யோகிகள் என்ற விருது வழங்கப்பட்டது.

12 - 14 வயது பிரிவில், சி.சதீஷ் முதலிடமும், 15 - 20 வயது பிரிவில் மதுமிதா முதலிடமும், 10 - 11 வயது பிரிவில் சி.ஜெ. பவித்ரன், கண்ணன் ஆகியோரும், 15 - 20 வயது பிரிவில் ஜெ.இந்துமதியும் இரண்டாமிடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், யோகா ஆசிரியா் காளியப்பனையும், பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், முதல்வா் பிராங்ளின் ரிச்சா்டு பிரபு , நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com