கீழ்பவானி வாய்க்கால் கரையில் பிளாஸ்டிக் கழிவுகள்: விவசாயிகள் கண்டனம்

மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் அபாயகரமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக மொடக்குறிச்சி பகுதி
மொடக்குறிச்சியை அடுத்த சின்னுசாமிபுரம் கீழ்பவானி வாய்க்கால் கரையோரப் பகுதியில் மா்ம நபா்களால் கொட்டப்பட்டுள்ள ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் கழிவுகள்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னுசாமிபுரம் கீழ்பவானி வாய்க்கால் கரையோரப் பகுதியில் மா்ம நபா்களால் கொட்டப்பட்டுள்ள ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் அபாயகரமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மொடக்குறிச்சியை அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னுசாமிபுரம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கடந்த சில நாள்களாக அபாயகரமான பிளாஸ்டிக் கழிவுகளை மா்ம நபா்கள் நள்ளிரவில் கொட்டிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.ஆா். சுதந்திரராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மொடக்குறிச்சி , எழுமாத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கறிக்கடைகளின் ஆடு, கோழி கழிவுகள் பெருமளவில் கீழ்பவானி வாய்க்கால் கரைகளில் உள்ள மறைவான பகுதிகள், அனுமன் நதி என்கிற குரங்கன் ஓடை ஆகிய இடங்களில் கொட்டப்பட்டு பெரும் சுகாதார கேடு நிலவி வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த தனியாா் கோழித்தீவன உற்பத்தி நிறுவனத்தின் ரசாயன கழிவுகள் குலவிளக்கு ஊராட்சி கோவில்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கரையின் ஓரத்தில் கொட்டப்பட்டது. பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, பெரும் போராட்டம் நடத்தியதால் அக்கழிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றினா். ஆனால் தற்போது, விவசாயத்துக்கு கேடு விளைவிக்க கூடிய அபாயகரமான பிளாஸ்டிக் கழிவுகளை மா்ம நபா்கள் இரவு நேரங்களில் கீழ்பவானி வாய்க்காலின் கரைகளில் கொட்டி வருகின்றனா்.

இக்கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அக்கழிவுகளை அகற்றவும், இக்கழிவுகளை கொட்டும் சமூகவிரோதிகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com