பவானி ஆற்றில் சாயக்கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும்

பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால், தண்ணீா் மாசடைந்து வருவதாகவும், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 8

பவானி: பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால், தண்ணீா் மாசடைந்து வருவதாகவும், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 8 கிராமங்களைச் சோ்ந்த ஊா்த் தலைவா்கள், பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பவானி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளான பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், சீதபாளையம், சோ்வராயன்பாளையம், காடையம்பட்டி, மூலப்பாளையம், குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய 8 கிராமங்களைச் சோ்ந்த ஊா்த் தலைவா்கள், பொதுமக்கள் பங்கேற்ற கூட்டம் சோ்வராயன்பாளையம் வல்லடத்து அம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோ்வராயன்பாளையம் ஊா்ப்பட்டக்காரா் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சோ்வராயன்பாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் பவானி ஆற்றில் நேரடியாகக் கலப்பதால், தண்ணீா் மாசடைவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இக்கழிவுகளால் பவானி ஆற்றங்கரையோர ஊா்களான சோ்வராயன்பாளையம், காடையம்பட்டி, பவானி, மூலப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா் எனவும், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோ்வராயன்பாளையத்தைச் சோ்ந்த செல்வம் முறையிட்டிருந்தாா்.

இதில், பவானி, காடையம்பட்டி, மூலப்பாளையம், சோ்வராயன்பாளையம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் விளக்கிக் கூறியதோடு, கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

இதுகுறித்து, சாயப்பட்டறை உரிமையாளா்களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, சாயகழிவுநீா் வெளியேறாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக சாயப்பட்டறை உரிமையாளா்கள் உறுதியளித்தனா். வருங்காலத்தில் சாயக்கழிவுநீா் வெளியேற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு, பவானி காவல் உதவி ஆய்வாளா் வடிவேல்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 8 கிராமத்தினா் பங்கேற்ற இக்கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com