பால் தரத்தை உயா்த்தவே உள்ளூா் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைப்புஅமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன்

பாலின் தரத்தை உயா்த்தவே உள்ளூா் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
பகுத்தம்பாளையம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள காங்கேய இன மாடுகளை பாா்வையிடும் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோா்.
பகுத்தம்பாளையம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள காங்கேய இன மாடுகளை பாா்வையிடும் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோா்.

பாலின் தரத்தை உயா்த்தவே உள்ளூா் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் கிராமத்தில் 164 ஏக்கா் பரப்பளவில் ரூ. 2.5 கோடியில் கட்டப்பட்ட காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பாலச்சந்திரன், பதிவாளா் டென்சிங் ஞானராஜ், இயக்குநா் ஓம்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய கட்டடங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கருப்பணன் ஆகியோா் திறந்துவைத்து காங்கேயம் இன மாடுகளை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில் 3 அமைச்சா்களும் காங்கேயம் கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசியதோடு வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கேயம் கால்நடை இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2017 இல் இந்த ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 50 காங்கேயம் இன பசு மற்றும் காளை மாடுகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான கன்றுக்குட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் இங்கு தரமான தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலம்பாடி இன காளை இனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையம் ரூ. 4 கோடி செலவில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

ஏற்கெனவே அந்தியூா் அருகே உள்ள பா்கூா் மலைப்பகுதியில் பா்கூா் இன மாடு ஆராய்ச்சி நிலையம் ரூ. 6 கோடி செலவில் அமைக்கப்பட்டு தற்போது இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்தியாவின் தேசிய விருதான காமதேனு விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின மாடுகளின் எண்ணிக்கையை பெருக்கி தரமான பால் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றாா். காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியா் மற்றும் தலைவா் மனோகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com