ரூ. 1.90 கோடிக்கு கொப்பரை ஏலம்
By DIN | Published on : 28th November 2019 07:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 90 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,008 மூட்டைகளில் 2 லட்சத்து 35 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 88.09 க்கும், அதிகபட்சமாக ரூ. 96.23 க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 11.10 க்கும், அதிகபட்சமாக ரூ. 91.66 க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. ஒரு கோடியே 90 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.