Enable Javscript for better performance
ரூ. 22.47 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி அருகேயுள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 22.47 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இங்கு, 4,923 தேங்காய்கள் சிறியவை ரூ. 6.50 முதல் பெரியவை ரூ. 17 வரையில் என ரூ. 50,318 க்கும், 46 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 80.89 முதல் ரூ. 102.50 வரையில் என ரூ. 76,474 க்கும், 542 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 48.10 முதல் ரூ. 56 வரையில் என ரூ. 9,78,991 க்கும், 61 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 17 முதல் ரூ. 24.66 வரையில் என ரூ. 93,247 க்கும், 171 மூட்டைகள் எள் கிலோ ரூ. 98.76 முதல் ரூ. 119.95 வரையில் என ரூ. 10,48,570 க்கும் ஏலம் போயின. மொத்தம் 820 மூட்டைகள் 385.21 குவிண்டால் வேளாண்மை விளைபொருள்கள் மொத்தம் ரூ. 22,47,600 க்கு விற்பனையாயின என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai