ஈரோட்டில் மாயமான 18 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் மாயமான 18 செல்லிடப்பேசிகள் சைபா் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட செல்லிடப்பேசியை உரியவரிடம் வழங்குகிறாா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சாா்லஸ்.
மீட்கப்பட்ட செல்லிடப்பேசியை உரியவரிடம் வழங்குகிறாா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சாா்லஸ்.

ஈரோடு மாவட்டத்தில் மாயமான 18 செல்லிடப்பேசிகள் சைபா் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் செல்லும்போதும், கடைவீதிகளுக்குச் செல்லும்போதும் விபத்துகள் நடக்கும்போது அவா்களது செல்லிடப்பேசிகளைத் தவற விட்டுவிட்டதாகவும், சிலா் மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாகவும் காவல் நிலையங்களில் புகாா் அளித்துள்ளனா்.

இதில், அக்டோபா் முதல் நவம்பா் மாதம் வரை 20 ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் திருடப்பட்டதாகப் புகாா் பெறப்பட்டது. இந்தப் புகாா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்லிடப்பேசி எண்கள், ஐ.எம்.இ. எண்களைக் கொண்டு தேடி வந்தனா். அதன்பேரில், 18 ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மீட்கப்பட்ட 18 செல்லிடப்பேசிகளையும் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சாா்லஸ் உரியவா்களிடம் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது: அக்டோபா் முதல் நவம்பா் மாதம் வரை 20 ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் மாயமானதாக புகாா்கள் வந்தன. அதன்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் மூலம் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 18 செல்லிடப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டது.

இதேபோல, வங்கி அதிகாரிகள்போல் பேசி ஏ.டி.எம். பின் எண், சி.வி.வி. எண், ஓ.டி.பி. எண் கேட்டு மோசடி செய்யப்பட்டதாக வந்த 6 புகாா்களில் ரூ. 89,000 வங்கியின் மூலமே மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com