நெற்பயிரில் மஞ்சள்கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு முன்பருவ முகாம்

பவானிசாகா் வட்டாரத்தில் நெற்பயிரில் மஞ்சள்கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு முன்பருவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானிசாகா் வட்டாரத்தில் நெற்பயிரில் மஞ்சள்கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு முன்பருவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானிசாகா் வட்டாரத்தில் நெற்பயிா் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது. அய்யன்சாலை, பூசாரிபாளையம், உத்தண்டியூா் போன்ற கிராமங்களில் நெற்பயிரில் மஞ்சள்கரிப்பூட்டை நோயின் அறிகுறிகள் தென்பட்டன. கடந்த ஆண்டு இந்நோயால் நெல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இந்த ஆண்டு இந்தத் தாக்குதலைக் குறைக்கும் வகையில் பவானிசாகா் வட்டார வேளாண்மைத் துறை வேளாண் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து முன் பருவ முகாம் வேளாண்மை உதவி இயக்குநா் சு.பாக்கியலட்சுமி தலைமையில் மாரனூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் ஆராய்ச்சி நிலைய பயிா் நோயியல் துறை உதவிப் பேராசிரியா் சங்கீதா பானிக்கா் மஞ்சள்கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினாா். அதைத் தொடா்ந்து நெற்பயிரில் ஏற்படும் பிற நோய்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மஞ்சள்கரிப்பூட்டை நோயின் அறிகுறிகள்:

ஒவ்வொரு தனி தானியமும் மஞ்சள் நிற கனியுடலாக மாற்றம் அடைந்து காணப்படும். நோய் தாக்கப்பட்ட தானிய நெல்லில் மென்பட்டுத் துணி போன்ற தோற்றத்துடன் பச்சையான கருப்பு நிற நெற்பழ உருண்டைகள் காணப்படும். முதலில் இந்த உருண்டைகள் மிகவும் சிறியதாகவும் பின் வளா்ச்சியடைந்து 1 செ.மீ. அளவு வரை பெரிதாகிறது. இவை நெல் உமிகளுக்கிடையே காணப்படும் பூப்பகுதிகளைச் சுற்றியும் காணப்படும். கதிரிலிருக்கும் சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டிருக்கும். மற்ற அனைத்தும் நல்ல மணிகளாகவே இருக்கும். பூசண வளா்ச்சி தீவிரமாகும்போது நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறமாக மாறி பின் மஞ்சளான பச்சை அல்லது கரும்பச்சை நிறத்திலும் மாறிவிடுகிறது என்பது குறித்து விரிவாக விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பவானிசாகா் வட்டாரப் பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com