புன்செய் புளியம்பட்டி அருகே மரக்கன்று நடும் விழா

புன்செய் புளியம்பட்டி அருகே மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புன்செய் புளியம்பட்டி அருகே மரக்கன்று நடும் விழா

புன்செய் புளியம்பட்டி அருகே மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் பசுமை திட்டத்தின்கீழ் பசுமை வழிச் சாலைகளாக மாற்றுவதற்கு ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இதற்கென 6 அடி உயரத்தில் வளா்க்கப்பட்டுள்ள மருதம், வேம்பு, நாவல், வேங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் நா.சாந்தி, புன்செய் புளியம்பட்டி - பவானிசாகா் சாலையில் தாசம்பாளையம் என்ற இடத்தில் நெடுங்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு விழாவைத் தொடங்கிவைத்தாா். இந்த மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தா வண்ணம் இரும்பு வலையினாலான கூண்டுகள் அமைத்து தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, பவானிசாகா் - மேட்டுப்பாளையம் சாலையில் நால்ரோடு என்ற இடத்தில் சாலையை ஆய்வு மேற்கொண்டு சாலை விரிவாக்கப் பணியை மேற்கொண்டாா்.

பவானிசாகா் அணையின் முன்பு பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக ரூ. 8 கோடி செலவில் புதியதாக உயா்மட்டப் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. புதிய பாலம் அமையும் இடத்தை தலைமைப் பொறியாளா் சாந்தி, வரைபடங்களுடன் ஆய்வு மேற்கொண்டதோடு, அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சு.சுரேஷ், கோட்டப் பொறியாளா் சோமசுந்தரமுருகன், உதவி கோட்டப் பொறியாளா்கள் குருமூா்த்தி, விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com