புன்செய் புளியம்பட்டியில் 600 மாணவா்களுக்கு விடியல் விருதுகள்

பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு விடியல் விருது, பல துறைகளில் சாதனை
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள். உடன், மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், எழுத்தாளா் வா.மணிகண்டன் உள்ளிட்டோா்.
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள். உடன், மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், எழுத்தாளா் வா.மணிகண்டன் உள்ளிட்டோா்.

பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு விடியல் விருது, பல துறைகளில் சாதனை படைத்த மாணவா்களுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளா் விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ தேனு சில்க்ஸ், அம்மா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில், விடியல் சமூக நல அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றாா். புளியம்பட்டி முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.எஸ்.அன்பு தலைமை வகித்தாா். அம்மா மெட்ரிக். பள்ளிச் செயலாளா் ராணி லக்ஷ்மி அன்பு, சத்தியமங்கலம் மாவட்டக் கல்வி அலுவலா் கோ.ச.செந்தில்குமாா், எழுத்தாளா் வா.மணிகண்டன், புளியம்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளா் வசந்தகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினா்.

2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வன், கலைமகள், காமராஜா் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விடியல் சாதனை பள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல, கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 200 பள்ளிகளைச் சோ்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கே.வி.காளியப்ப கவுண்டா் பொது நல அறக்கட்டளைத் தலைவா் பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினா் முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.எம்.எச்.முகமது இலியாஸ், ராதாகிருஷ்ணன், வெற்றி நா்சிங் ஸ்ரீதா், நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் உள்பட 1,000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com