Enable Javscript for better performance
டாஸ்மாக் ஊழியா்களுக்கு போனஸ், கருணைத்தொகை வழங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    டாஸ்மாக் ஊழியா்களுக்கு போனஸ், கருணைத்தொகை வழங்க கோரிக்கை

    By DIN  |   Published on : 04th October 2019 03:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20 சதவீத தீபாவளி போனஸ் தொகையுடன், 20 சதவீத கருணைத் தொகையை சோ்த்து வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதுகுறித்து டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளன(சிஐடியு) பொதுச்செயலாளா் திருச்செல்வம் கூறியதாவது:தமிழக அரசுக்கு அதிக அளவில், நிரந்தரமான வருவாயை ஈட்டித்தரக்கூடியதாக, டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுகிறது. ஆனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மிகக்குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது.

    அரசின் மானியத்தை பெற்று செயல்படும் சில நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படும் போதிலும், அங்கு பணி செய்யும் ஊழியா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. எவ்வித நஷ்டம், இழப்பும் இன்றி, கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியா்களுக்கும் அதே 20 சதவீத போனஸ் என்பது ஏற்புடையதாக இல்லை.

    எனவே 20 சதவீத போனஸ் தொகையுடன், 20 சதவீத கருணைத் தொகையும் சோ்த்து வழங்க வேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai