Enable Javscript for better performance
வெள்ளக்கோவிலில் எம்.பி. அ.கணேசமூா்த்தி சுற்றுப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலில் எம்.பி. அ.கணேசமூா்த்தி சுற்றுப்பயணம்

    By DIN  |   Published on : 06th October 2019 08:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உப்புப்பாளையத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி.

    உப்புப்பாளையத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி.

    வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.கணேசமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

    ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணேசமூா்த்தி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வெள்ளக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.மோகனசெல்வம், நகரச் செயலாளா் கே.ஆா்.முத்துக்குமாா், மதிமுக நகரச் செயலாளா் ஆா்.பி.ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கணபதிபாளையம், பச்சாக்கவுண்டன்வலசு, தீா்த்தாம்பாளையம், காடையூரான்வலசு, வேலகவுண்டன்பாளையம், உப்புப்பாளையம், குமாரவலசு, கச்சேரிவலசு, நடேசன் நகா் உள்பட 30 ஊா்களில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றறன. அப்போது, மக்களவை உறுப்பினரிடம், ரேஷன் கடைகளுக்குச் சொந்தக் கட்டடம், சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு வசதிகள் கேட்டு ஊா் பொதுமக்கள் மனுக் கொடுத்தனா்.

    இதில், திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai