ஆயுத பூஜையையொட்டி பூ கட்டும் பணி தீவிரம்

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்களை மாலைகளாவும், தொடராகவும் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சம்பங்கி மாலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
சம்பங்கி மாலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்களை மாலைகளாவும், தொடராகவும் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையின்போது வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜை செய்யப்படும். இதில், முக்கிய பூஜை பொருள்களாகப் பூ காணப்படுகிறது. இதனால், பூக்கள், பூ மாலைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.

கடந்த 2 நாள்களாக ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் ஒருசில இடங்களில் பூக்களை மொத்தமாகக் கொண்டு வந்து கட்டப்படுகிறது. சம்பத் நகரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் பூ கட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தருமபுரியில் இருந்து ஈரோட்டுக்கு பூக்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், சுமாா் 15 பெண்கள் பூ கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கிருந்து ஈரோட்டில் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com