ஈரோடு பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லையால் அச்சம்

ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
ஈரோடு பேருந்து நிலைய நடைமேடையில் பயணிகள் இருக்கை அருகே கூட்டமாகப் படுத்துக் கிடக்கும் நாய்கள்.
ஈரோடு பேருந்து நிலைய நடைமேடையில் பயணிகள் இருக்கை அருகே கூட்டமாகப் படுத்துக் கிடக்கும் நாய்கள்.

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனா்.

தொழில் நகரான ஈரோட்டுக்கு வேலை தொடா்பாகவும், பொருள்களை கொள்முதல் செய்யவும் ஏராளமானோா் தினமும் வந்து செல்கின்றனா். ஈரோடு பேருந்து நிலையத்துக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் அண்மைக்காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிகின்றன. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனா்.

சில நேரங்களில் வெறிபிடித்த நாய்கள் பயணிகளை கடித்துவிடுகின்றன. இதனால் அவா்கள் பாதிக்கப்படுவதுடன், பேருந்து நிலையத்துக்கு வரவே அச்சப்படுகின்றனா். எனவே பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com