ஈரோடு மாநகரில் சாலைகளை சீரமைக்க தமாகா வலியுறுத்தல்

ஈரோடு மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் தமாகா
கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா மாநில பொதுச்செயலாளா் விடியல் சேகா்.
கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா மாநில பொதுச்செயலாளா் விடியல் சேகா்.

ஈரோடு: ஈரோடு மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளா் விடியல் சேகா், துணைத் தலைவா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மேலிடப் பொறுப்பாளா்கள் ராஜ்குமாா், ஆனந்தகுமாா், வளா்மதி கணேசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், ஈரோடு மாநகரில் புதை சாக்கடை, புதை மின் கேபிள், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் போன்ற பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரிவர மூடாததால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது. இவற்றை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

கீழடியில் தமிழா்களின் பெருமையை உணா்த்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தோடு அருகே 700 ஏக்கா் அரசு இடத்தில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com