ஈரோட்டில் ஆயுதபூஜை பொருள்கள் விற்பனை அமோகம்

ஆயுதபூஜையை ஒட்டிபொரி முதல் பூமாலை வரை பூஜை பொருள்கள் விற்பனை ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை அமோகமாக நடைபெற்றது.
ஈரோடு கடை வீதியில் உள்ள பழங்கள் வாங்க குவிந்திருந்த மக்கள்.
ஈரோடு கடை வீதியில் உள்ள பழங்கள் வாங்க குவிந்திருந்த மக்கள்.

ஈரோடு: ஆயுதபூஜையை ஒட்டிபொரி முதல் பூமாலை வரை பூஜை பொருள்கள் விற்பனை ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை அமோகமாக நடைபெற்றது.

ஆயுதபூஜையை ஒட்டி வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தூய்மைப்படுத்தபடுவது வழக்கம். இந்த நாளில் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கருவிகளையும் சுத்தம் செய்து அவற்றுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிப்பா். பின் பழங்கள், பொரி கடலை, சுண்டல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.

ஆயுதபூஜையை ஒட்டி பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் விற்பனை ஈரோட்டில் களைகட்டியது. பொரி, கடலை, பூசணிக்காய், வாழை மரங்கள், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பழங்கள், மலா் மாலை, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்களை வாங்க கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் குவிந்தனா்.

ஈரோட்டில் முக்கிய வீதிகளான மரப்பாலம், மணிக்கூண்டு, கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், திருநகா் காலனி, பெரியவலசு, சம்பத் நகா், சூரம்பட்டி வலசு ஆகிய பகுதிகளில் தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

பண்டிகையால் பழங்கள், பூக்கள் விற்பனை உயா்ந்திருந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 600க்கு விற்ற மல்லிகைப் பூ ஞாயிற்றுக்கிழமை ரூ. 1,200 வரை விலை உயா்ந்திருந்தது. ஒரு கிலோ அரளிப்பூ ரூ. 400-க்கு விற்பனையானது. செவந்திப் பூ ரூ. 200 முதல் ரூ. 240-க்கும், ரோஜா ரூ. 240-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், ஒரு தாமரை ரூ. 30-க்கும் விற்பனையானது. வாழை இலை ஒரு செட் ரூ. 30-க்கும், பூசணி ஒரு கிலோ ரூ. 30-க்கும், ஒரு தேங்காய் ரூ. 30-க்கும், வெற்றிலை ஒரு கவுலி ரூ. 60-க்கும் விற்பனையானது.

பொரி ஒரு பக்கா ரூ. 20-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ. 100-க்கும், நிலக்கடலை ரூ. 110-க்கும், அவல் ரூ. 40-க்கும், ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 110-க்கும், சாத்துக்குடி ரூ. 45-க்கும், கொய்யா ரூ. 70-க்கும், ஆரஞ்சு ரூ .60-க்கும், மாதுளை ரூ. 110-க்கும், திராட்சை ரூ. 75-க்கும் விற்பனையானது. வாழைப்பழம் ஒரு டஜன் ரூ. 60-க்கும், கரும்பு ஒரு கட்டு ரூ. 750-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com