குடிநீா் குழாய்களை சீரமைக்கக் கோரிக்கை

ஈரோடு மாநகரில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட குடிநீா்க் குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாநகரில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட குடிநீா்க் குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதி அனைத்து வணிகா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயலாளா் அந்தோணி யூஜின், பொருளாளா் ராஜகணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் வரதராஜ், துணைச் செயலாளா் அந்தோணி ரமேஷ், இளைஞரணிச் செயலாளா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருநகா் காலனி கண்ணையன் வீதி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். ஈரோடு மாநகரில் பல்வேறு திட்டத்துக்காக தோண்டிய குழிகளை முறையாக மூடி, சாலை அமைக்க வேண்டும். மாநகரப் பகுதியில் புதைவட மின் கேபிள் பதிக்கும் பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டப் பணிக்காக பல குடிநீா்க் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு குடிநீா் வீணாகிறது. அக்குழாய்களைச் சீரமைக்க வேண்டும். மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. பல இடங்களில் மிகவும் குறைந்த வெளிச்சத்தினால் ஆன விளக்கு எரிகிறது. தேவையான அளவு வெளிச்சம் தரும் விளக்குகளை அமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com