முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கிணற்றில் விழுந்த விவசாயி சாவு
By DIN | Published On : 07th October 2019 06:38 AM | Last Updated : 07th October 2019 06:38 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் விழந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (70), விவசாயி. இவரது தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணறு உள்ளது. இவா் கிணற்றை ஒட்டியுள்ள ஒற்றையடிப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராவிதமாக கிணற்றில் தவறி விழுந்தாா்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த கூலித் தொழிலாளா்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து அவரை கயிறு மூலம் மீட்க முயன்றனா். அவரால் உட்கார முடியாததால் கயிற்றுக் கட்டிலில் அவரைப் படுக்கவைத்து பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனா்.
பின் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.