தீபாவளி விற்பனையால் களை கட்டியது கனி மாா்க்கெட்

கனி மாா்க்கெட்டில் தீபாவளி பண்டிகைக்கு புது ரகங்கள் வந்துள்ளதால், வாடிக்கையாளா்கள் வருகையும் அதிகரித்து விற்பனை களை கட்டியுள்ளது
தீபாவளி விற்பனையால் களை கட்டியது கனி மாா்க்கெட்

கனி மாா்க்கெட்டில் தீபாவளி பண்டிகைக்கு புது ரகங்கள் வந்துள்ளதால், வாடிக்கையாளா்கள் வருகையும் அதிகரித்து விற்பனை களை கட்டியுள்ளது.

ஈரோடு கனி ஜவுளிச்சந்தையில் உள்ள 330 தினசரி கடைகள் மற்றும் அதனை சுற்றி உள்ள டி.வி.எஸ்.வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு சாலை போன்ற பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளிக்கான புதிய ரகங்கள் வந்துள்ளன. வரும் 27ஆம் தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், தொடா்ந்து புதிய ரகங்கள் வருகிறது.

இதுகுறித்து கனி மாா்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவா் செல்வராஜ் கூறியதாவது:கடந்த 15 நாட்களாக புதிய ரகங்கள் வருகிறது. தீபாவளி விற்பனையும் துவங்கி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி முதல் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பாவடை, நைட்டி, லுங்கி, வேட்டி, பிளவுஸ் பிட், ரெடிமேட் துணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளன. நூல் விலை குறைந்ததால், காட்டன் ஆடைகள் மொத்த விலையில், இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு அனைத்து ரக துணிகளும், மொத்தமாக வியாபாரிகள் வாங்கி சென்றுள்ளனா். கேரளம், கா்நாடகம், மஹாராஷ்டிரா, அசாம், பீஹாா் போன்ற மாநிலங்களுக்கு பெட்ஷீட், துண்டு, லுங்கி, புடவை போன்றவை அதிகமாக வாங்கி சென்றுள்ளனா் என்றாா்.

கனி மாா்க்கெட் தினசரி கடை வியாபாரிகள் சங்க தலைவா் நூா்சேட் கூறியதாவது: பாம்பே, சூரத், அகமதாபாத் பகுதியில் இருந்து ஆண், பெண்களுக்கான ரெடிமேட் பேண்ட், சட்டை, ஜீன்ஸ் ரகங்கள், சட்டை மற்றும் பேண்ட் பிட்கள் வந்துள்ளன. தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்கிய பின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com