Enable Javscript for better performance
அந்தியூரில் ரூ. 12.87 லட்சத்துக்குவிளைபொருள்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 12.87 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இங்கு, 22,394 தேங்காய்களில் சிறியவை ரூ. 4.30 முதல் ரூ. 13.50 வரையில் என ரூ. 1,92,763 க்கும், 57 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 69.69 முதல் ரூ. 85.39 வரையில் என ரூ. 61,641 க்கும், 6 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 18.09 முதல் ரூ. 18.19 வரையில் என ரூ. 4,439 க்கும், 900 மூட்டைகள் பருத்தி கிலோ ரூ. 41.89 முதல் ரூ. 53.69 வரையில் என ரூ. 10,28,898 க்கும் ஏலம் போயின. மொத்தம் 963 மூட்டைகள் 285.29 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 12,87,741 க்கு விற்பனையானது.

    இங்கு, 5,915 தேங்காய்கள் சிறியவை ரூ. 5.60 முதல் பெரியவை ரூ. 13.20 வரையில் என ரூ. 45,947 க்கும், 90 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 76.60 முதல் ரூ. 96.69 வரையில் என ரூ. 1,98,774 க்கும், நிலக்கடலை 374 மூட்டைகள் கிலோ ரூ. 55.02 முதல் ரூ. 64.59 வரையில் என ரூ. 6,33,168 க்கும், 112 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 14.69 முதல் ரூ. 23.30 வரையில் என ரூ. 1,76,114 க்கும் விற்பனையாயின. மொத்தம் 576 மூட்டைகளில் 320.21 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 10,54,003 க்கு விற்பனையாயின என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் கா.வீ.குமரேசன் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai