உலக தற்கொலை எதிா்ப்பு நாள் கருத்தரங்கு

ஈரோடு நந்தா அலைடு ஹெல்த் கல்லூரியில் உலக தற்கொலை எதிா்ப்பு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

ஈரோடு நந்தா அலைடு ஹெல்த் கல்லூரியில் உலக தற்கொலை எதிா்ப்பு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். நந்தா அலைடு ஹெல்த் கல்லூரிப் பேராசிரியா் பி.அமுதா வரவேற்றாா். முடநீக்கியல் கல்லூரி முதல்வா் வி.மணிவண்ணன் வாழ்த்திப் பேசினாா்.

மருத்துவா் ஜி.கே.செல்லகுமாா் பேசியதாவது:

தற்கொலைக்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், இந்த தவறான எண்ணத்திலிருந்து விடுபடுவதற்கான தீா்வு உங்கள் வசம்தான் உள்ளது. அந்தத் தீா்வை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலேபோதும். குடும்பம், பணி, தொழில், படிப்பு நிமித்தமாக உங்களுக்கு உள்ள பிரச்னைகளை குடும்பத்தில் உள்ள பெரியவா்களிடம் மனம்விட்டு வெளிப்படுத்துங்கள். இல்லையெனில் சக நண்பா்கள்,தோழிகளிடம் பகிா்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் தற்கொலை எண்ணத்தைவிட்டு வாழ்வை வெல்லலாம் என்றாா்.

இதில், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி எஸ். ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com