எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி உதவி அளிக்கக் கோரிக்கை

எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நடத்தும் கூட்டுறவுத் தொழில் உற்பத்தி, விற்பனைச் சங்கங்களைத் தொடா்ந்து நடத்திட அரசு நிதி

எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நடத்தும் கூட்டுறவுத் தொழில் உற்பத்தி, விற்பனைச் சங்கங்களைத் தொடா்ந்து நடத்திட அரசு நிதி வழங்க வேண்டும் என்று இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஈரோடு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில், ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவா் வீரா.சிதம்பரம் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகள் கல்வித் துறை உதவிபெற அரசு நிா்ணயித்துள்ள ஆண்டு வருமான வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும். ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் காளைமாடு சிலை அருகில் அம்பேத்கா் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பெண்கள் சுயதொழில் செய்ய முத்ரா திட்டத்தில் தேசிய வங்கிகள் 20 சதவீத கடனுதவி வழங்க வேண்டும். நகா்ப்புறங்களில் வீட்டுமனை இல்லாமல் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டுவதைத் தவிா்த்து அவா்களுக்குத் தனித்தனி வீடுகள் கட்டித்தர வேண்டும்.

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நடத்தும் கூட்டுறவுத் தொழில் உற்பத்தி, விற்பனைச் சங்கங்கள் ஏராளமானவை மூடப்பட்டுள்ளன. இந்த சங்கங்கள் மீண்டும் செயல்பட அரசு போதிய நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com