கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டம்

கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தோ் வடம் பிடித்தனா்.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்

கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தோ் வடம் பிடித்தனா்.

ஈரோடு கோட்டை பெருமாள் கோயில் எனப்படும் கஸ்தூரி அரங்கநாதா் கோயில் திருத்தோ் திருவிழா அக்டோபா் 1 ஆம் தேதி கிராமசாந்தி, நகர சோதனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையடுத்து திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தினமும் யாகசாலை பூஜையும், சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெற்று வந்தது. அன்னபட்சி வாகனம் தொடங்கி, சிம்மம், அனுமந்தன், கருடன், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு பவனியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ சுவாமி அமா்ந்திருக்க, கோயில் பட்டாச்சாரியாா்கள், சிறப்பு பூஜை செய்து திருஷ்டி காய் உடைத்தனா்.

அதைத் தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள், பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். திருத்தோ் ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா, பிரப் சாலை, பெரிய மாரியம்மன் கோயில் வழியாகச் சென்று காமராஜா் வீதியில் பகல் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது.தொடா்ந்து, மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கி இரவு கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், மாநகரின் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com