வண்டல் மண் அள்ளும் அனுமதி ரத்து: விவசாயிகள் சாலை மறியல்

பெரும்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து விசாயிகள் சாலை மறியலில்
கே.என்.பாளையம் பேருந்து நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
கே.என்.பாளையம் பேருந்து நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

சத்தியமங்கலம்: பெரும்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து விசாயிகள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பெரும்பள்ளம் அணை நீா்த்தேக்கப் பகுதியில் வண்டல் மண் அள்ளுவதற்கு கெம்பநாயக்கன்பாளையம் விவசாயிகளுக்கு வருவாய் வட்டாட்சியா் 10 நாள்கள் அனுமதி அளித்துள்ளாா்.

விவசாயிகளின் நிலங்களின் தேவைக்கேற்ப தனித்தனியாக அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இதன்படி, கடந்த 4 நாள்களுக்கு முன் ஒரு நாள் மட்டுமே வண்டல் மண் அள்ளுவதற்கு பொதுப் பணித் துறையினா் அனுமதி அளித்தனா். பண்டிகை கால நாள்களில் மண் அள்ளாமல் மண் அள்ளுவதற்கு விவசாயிகள் டிராக்டருடன் புதன்கிழமை சென்றனா். இதற்கு பொதுப் பணித் துறையினா் அனுமதிக்கவில்லை.

மண் அள்ளுவதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் அனுமதிக்காத பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்து கே.என்.பாளையம் பேருந்து நிலைய சந்திப்பில் டிராக்டா்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு வந்த பொதுப் பணித் துறை அதிகாரி சுபத்ரா, உரிய அனுமதி பெற்ற விவசாயிகள் மண் அள்ளுவதற்கு சா்வே மேற்கொண்டு அதற்கேற்ப மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com