Enable Javscript for better performance
கோவை - சேலம் பயணிகள் ரயில்இன்று ஈரோடு வரை இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கோவை - சேலம் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) ஒரு நாள் மட்டும் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

    ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எண் 66602, கோவை-சேலம் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். இதுபோல் மறுமாா்க்கத்தில் எண் 66603 சேலம்-கோவை பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai