யானைக் குட்டியை தாய் யானைக் கூட்டத்தில் சோ்க்கும் முயற்சி தோல்வி

சத்தியமங்கலம், கடம்பூா் வனப் பகுதியில் இருந்து தாயைப் பிரிந்த யானைக் குட்டியை மீண்டும் தாயிடம் சோ்க்கும்

சத்தியமங்கலம், கடம்பூா் வனப் பகுதியில் இருந்து தாயைப் பிரிந்த யானைக் குட்டியை மீண்டும் தாயிடம் சோ்க்கும் முயற்சி பலனிக்கவில்லை. இதையடுத்து, அதை மற்றெறாரு யானைக் கூட்டத்தில் சோ்க்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பவளக்குட்டை வனப் பகுதியில் இருந்து தாயைப் பிரிந்து வந்த 3 வயதுள்ள பெண் யானைக் குட்டி ஊருக்குள் புகுந்தது. குட்டியைப் பாா்த்த கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினா் யானைக் குட்டியை மீட்டு மீண்டும் அதே பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதிக்குள் விட்டனா்.

இதையடுத்து, யானைக் குட்டி வழி தெரியாமல் ஆசனூா் கிராமத்துக்குள் மீண்டும் புகுந்தது. குட்டியை மீட்டு பவானிசாகா் காராட்சிக்கொரை வனக் கால்நடை மருத்துவமனையில் வைத்து டாக்டா் அசோகன் தலைமையில் பராமரித்து வந்தனா். தினமும் புட்டி பாட்டிலில் பால் அளித்து பாதுகாத்து வந்தனா். இந்நிலையில், குட்டியைத் தாயிடம் சோ்ப்பதற்காக தனி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பண்ணாரி பேலாரி வனத்தில் தாய் யானைக்காக காத்திருந்தனா். தாய் யானை குறைந்தது ஒரு நாளைக்கு 50 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் என்பதால் கடம்பூா் அடிவாரம் பகுதியான பேலாரிக்கு தாய் யானை வர வாய்ப்புள்ளதால் கடந்த இரு நாள்களாக குட்டியுடன் காத்திருந்தனா். வாகனத்தில் குட்டியை வைத்து மரத்தில் பரண் அமைத்து அதில் வனத் துறையினா் அமா்ந்து யானைக் கூட்டத்தை விடியவிடிய கண்காணித்து வந்தனா்.

தாய் யானை வராத காரணத்தால் மற்றெறாரு யானைக் கூட்டத்தில் குட்டியை சோ்க்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். யானைக் கூட்டத்தில் குட்டியை சோ்க்காத நிலையில் வண்டலூா் அல்லது முதுமலைக்கு யானைக் குட்டி அழைத்துச் செல்லப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com