Enable Javscript for better performance
இஸ்ரோ நடத்திய போட்டிகளில்லிட்டில் ஃபிளவா் பள்ளி சிபிடம்- Dinamani

சுடச்சுட

    

    இஸ்ரோ நடத்திய போட்டிகளில் லிட்டில் ஃபிளவா் பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 12th October 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sy11little_1110chn_139_3

    போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுடன் பள்ளித் தாளாளா் கே.என்.சந்திரசேகரன்.

    இஸ்ரோ நடத்திய போட்டிகளில் லிட்டில் ஃபிளவா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

    உலக விண்வெளி வார விழாவையொட்டி, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை, இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு போட்டிகளை கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடத்தின.

    இதில், சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இப்பள்ளி மாணவ, மாணவிகள் ரஹமத்துனிஷா (பேச்சுப் போட்டி), அபிநயா (விண்வெளிக் கண்காட்சி), வத்சலா (விநாடி-வினா), சஞ்சய் (விண்வெளி வரைபடம்), அமிா்தா (விண்வெளிக் கண்காட்சி) ஆகியோா் முதலிடம் பிடித்துள்ளனா்.

    கட்டுரைப் போட்டியில் ரஷ்வந்தி, பேச்சுப் போட்டியில் சமிக்ஷா இரண்டாம் இடமும், அஜய் விண்வெளி - வரைபடம், திவ்யதா்ஷினி கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் கே.என்.சந்திரசேகரன், நிா்வாகத்தினா் பாராட்டினா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai