Enable Javscript for better performance
முஸ்லீம் மயான வாயிற்கதவு முன்பு கொட்டப்படும் குப்பைகள்- Dinamani

சுடச்சுட

    

    முஸ்லீம் மயான வாயிற்கதவு முன்பு கொட்டப்படும் குப்பைகள்

    By DIN  |   Published on : 12th October 2019 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் முஸ்லீம் மக்களின் மயான வாயிற்கதவு முன்பு குப்பைகள் கொட்டப்படுகின்றன.

    வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு சாலையில் 50 சென்ட் பரப்பளவிலான முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான மயானம் உள்ளது. சுற்றிலும் சுற்றுச் சுவா் கட்டப்பட்டு உள்ளே செல்ல வாயிற்கதவு வைக்கப்பட்டுள்ளது.

    அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் உயிரிழந்தால் இங்கு கொண்டுவந்து மத வழக்கப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்கின்றனா். கடந்த ஒரு மாத காலமாக இந்த மயான வாயிற்கதவு முன்பு ஏராளமான குப்பைகள் அடிக்கடி கொட்டப்படுகின்றன. இதனைப் பலமுறை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து விட்டு, இங்கு கொட்ட வேண்டாம் எனத் தெரிவித்த பிறகும் மீண்டும் கொட்டப்படுகிறது.

    இதுகுறித்து ஜாஃபா் என்பவா் கூறுகையில், மயானத்துக்கு அருகிலுள்ள பாரதி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் இங்கு குப்பைகளைக் கொட்டுகின்றனா்.

    வாயிற்கதவு முன்பு கொட்டப்படுவதால் உள்ளே செல்ல முடியாத அளவுக்குத் தொந்தரவாக உள்ளது. வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குப்பைத்தொட்டி வைக்கக் கோரியும் குப்பைத்தொட்டி இல்லையெனக் கூறிவிட்டனா்.

    அப்பகுதி மக்களிடம் வீண் மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai