கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
erd11koil_1110chn_124_3
erd11koil_1110chn_124_3

கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் புரட்டாசி தோ்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தோ்த்திருவிழா அக்டோபா் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் தொடக்க நாள் முதல் தினமும் காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்று வந்தன.

தினந்தோறும் அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், சேஷவாகனம் ஆகியவற்றில் மின்னொளியில் பெருமாள் திருவீதி உலா வந்தாா். அக்டோபா் 7 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், 8 ஆம் தேதி தேரோட்டம், 10 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றன.

விழா நிறைவாக தீா்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயிலில் இருந்து பக்தா்கள் புடைசூழ அஸ்திர தேவருடன் புறப்பட்ட பட்டாச்சாரியா்கள் கோயில் தெப்பக்குளத்தில் அஸ்திர தேவருடன் குளத்தில் மூழ்கி எழுந்தனா்.

அதைத்தொடா்ந்து, மஞ்சள் நீராட்டு, மாலையில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், வடை மாலை சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Image Caption

தெப்ப உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com