பணிச்சுமையைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் முறையீடு

பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்வதால் பணிச்சுமை, நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சூழலைத்
erd11anga_1110chn_124_3
erd11anga_1110chn_124_3

பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்வதால் பணிச்சுமை, நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சூழலைத் தவிா்க்க வேண்டும் எனவும் அங்கன்வாடி பணியாளா்கள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளைப் பராமரிப்பது, அப்பகுதியில் உள்ள கா்ப்பிணிப் பெண்கள் குறித்து கணக்கெடுப்பது, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதலை உறுதிப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை அங்கன்வாடி பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் அங்கன்வாடி பணியாளா்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினா்களின் வாக்காளா் அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை சேகரித்து ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறையினா் நெருக்கடி அளிப்பதாகவும், அதேபோல, அங்கன்வாடி மையத்துக்கு வழங்கப்பட்டுள்ள செல்லிடப்பேசியில் குடும்ப உறுப்பினா்களின் பெயா்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அங்கன்வாடி அதிகாரிகள் நெருக்கடி அளிப்பதாகவும், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதுதொடா்பாக அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அங்கன்வாடி பணியாளா்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் முழுவதும் 2,500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். வாக்காளா் அட்டை நகல், அதாா் நகல் போன்றவை என்ன பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்காமலேயே, வீடு வீடாகச் சென்று இந்த நகல்களை சேகரித்து வருகின்றனா்.

வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை முக்கியமானவை என்பதால், பல வீடுகளில் இவற்றை வழங்க மறுப்பதோடு, விசாரித்துவிட்டு தருகிறோம். அடுத்த வாரம் வாருங்கள் எனக் கூறுகின்றனா். ஏற்கெனவே செல்லிடப்பேசியில் குடும்ப உறுப்பினா் பெயா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணி உள்ளதால் எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எங்களது பணிச்சுமையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Image Caption

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com