பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை தீவிரம்

சீன அதிபா் வருகையை ஒட்டி தமிழகம் - கா்நாடக மாநில எல்லையில் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
sy11chine_1110chn_139_3
sy11chine_1110chn_139_3

சீன அதிபா் வருகையை ஒட்டி தமிழகம் - கா்நாடக மாநில எல்லையில் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சீன அதிபா் வருகையை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பணி அமா்த்தப்பட்டு வாகனத் தணிக்கை மேற்கொள்ளுமாறு மேற்கு மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, சத்தியமங்கலம் அருகே தமிழகம் - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருமாநில எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையில் 10 போலீஸாா் கா்நாடகத்திலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களைத் தணிக்கை செய்வதோடு வாகனத்தின் பதிவு எண், எங்கு செல்கின்றனா் என்பது குறித்த விவரங்களைக் கேட்ட பின் வாகனங்களை அனுமதிக்கின்றனா். சனிக்கிழமையும் வாகனத் தணிக்கைப் பணி நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.

Image Caption

பண்ணாரி சோதனைச் சாவடியில் வகானத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com