விசைத்தறி தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கக் கோரிக்கை

விசைத்தறி தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. கட்சியின் சென்னிமலை வட்டார

விசைத்தறி தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. கட்சியின் சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, வட்டாரத் துணைத் தலைவா் எம்.பால்ராஜ் தலைமை வகித்தாா்.

சங்கப் பொதுச் செயலாளரும், ஏஐடியூசி மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி, சங்கத் தலைவா் எம்.செங்கோட்டையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் மா.நாகப்பன், ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத் தலைவா் எஸ்.பொன்னுசாமி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ஏ.தியாகராஜன் உள்ளிட்ட பலா் உரையாற்றினா். இதில், விசைத்தறி தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளா்களுக்கு 25% போனஸ், 40% ஊதிய உயா்வு, தேசிய பண்டிகை விடுமுறை நாள்கள் சட்டப்படி ஆண்டுக்கு 9 நாள்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், தொழிலாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவை கோரிக்கைகள் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அக்கோரிக்கைகள் மீது உடனடியாப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண வலியுறுத்தி அக்டோபா் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னிமலையில் உள்ள சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்று, சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

இந்தப் பேரணி - ஆா்ப்பாட்டத்தில், சென்னிமலை வட்டாரத்தில் உள்ள அனைத்து விசைத்தறி தொழிலாளா்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com