முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அக்டோபா் 25- இல் அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 24th October 2019 08:57 PM | Last Updated : 24th October 2019 08:57 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) காலை 10 மணிக்கு அம்மா திட்டம், சிறப்பு குறைதீா் கூட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: ஈரோடு வட்டத்தில் மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் வரப்பாளையம் கிராம சேவை மையம், மொடக்குறிச்சி வட்டத்தில் ஈஞ்சம்பள்ளி - ஆ கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் புன்செய் கிளாம்பாடி-ஆ கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பவானி வட்டத்தில் தொட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
சத்தியமங்கலம் வட்டத்தில், குன்றி கிராமம், நல்லூா் கிராம சேவை மையம், கோபி வட்டத்தில் குள்ளம்பாளைம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், அந்தியூா் வட்டத்தில் வேம்பத்தி ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், தாளவாடி வட்டத்தில், ஆசனூா் கிராமம் ஒசக்கி அங்கன்வாடி மையம், நம்பியூா் வட்டத்தில் சொக்குமாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.