முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் இன்று ரத்து
By DIN | Published On : 24th October 2019 11:54 PM | Last Updated : 24th October 2019 11:54 PM | அ+அ அ- |

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் உள்ளிட்ட சில பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) ஒரு நாள் மட்டும் இயக்கப்படாது என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
நிறுத்தப்படும் ரயில்கள் விவரம்:
ரயில் எண் 56110 ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில், ரயில் எண் 76833 திருச்சி - கரூா் பயணிகள் ரயில், ரயில் எண் 76834 கரூா் - திருச்சி பயணிகள் ரயில், ரயில் எண் 76802 கரூா்-சேலம், ரயில் எண் 76801 சேலம் - கரூா் பயணிகள் ரயில்கள் இயக்கம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் கரூா் வரை இயக்கப்படும். ரயில் எண் 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் கரூரிலிருந்து புறப்படும். ரயில் எண் 56109 திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் திருச்சியில் இருந்து மாலை 4.20 மணிக்குப் பதிலாக 5.20 மணிக்குப் புறப்படும்.