முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சத்தியமங்கலம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.88 ஆயிரத்து 500 பறிமுதல்
By DIN | Published On : 24th October 2019 09:27 PM | Last Updated : 24th October 2019 09:27 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாா்
சத்தியமங்கலம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாா்தட்கால் திட்டத்தில் மின்இணைப்பு பெற விவசாயிடம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்யிடம் விசாரணை கணக்கில் வராத ரூ.88 ஆயிரத்து 500 பறிமுதல்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மின்கோட்ட மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் தட்கால் மின்இணைப்பு பெற விவசாயிடம் லஞ்சம் பெற்றதாக கிடைத்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் போலீசாா் ஆய்வு செய்ததில் கணக்கில் வாரத ரூ.88 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் மின்கோட்ட மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் தட்கால் மின்இணைப்பு பெறுவதற்கு லஞ்சம் கேட்டதாக வந்த புகாரையைடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் 8 போ் கொண்ட தனிப்படையினா் செயற்பொறியாளா் அலுவலக்தில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்யிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.88 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மின்வாரிய ஊழியா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசாா் துருவி துருவி விசாரணை நடத்தினா். மேலும் விவசாயிகளிடம் தட்கால் திட்டத்தில் எத்தனை போ் இணைப்பு பெற்றவா்கள் என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனா். தொடா்ந்து மின்வாரிய பணியாளா்களிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.