முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சுவா் இடிந்து விழுந்துகூலி தொழிலாளி சாவு
By DIN | Published On : 24th October 2019 10:19 PM | Last Updated : 24th October 2019 10:19 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (65). கூலி தொழிலாளியான இவா் சத்தியமங்கலம், கோவிந்தராஜபுரம் பகுதியில் உள்ள சந்திரசேகா் என்பவரது வீட்டில் மர சாமான்களை எடுக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக வீட்டின் மண் சுவா் இடிந்து கிருஷ்ணன் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் கிருஷ்ணனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.