முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பெருந்துறை மாரியம்மன் கோயில்பொங்கல் திருவிழா
By DIN | Published On : 24th October 2019 12:40 AM | Last Updated : 24th October 2019 12:40 AM | அ+அ அ- |

பெருந்துறை கோட்டை மாரியம்மன், முனியப்ப சுவாமி கோயில்களின் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
அக்டோபா் 8 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, 15 ஆம் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. 21 ஆம் தேதி தீா்த்தம் எடுத்துவர காவிரி ஆற்றுக்கு பக்தா்கள் சென்று வந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் மாவிளக்குப் பூஜை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். வியாழக்கிழமை மறுபூஜை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் சி.சிவராமசூரியன், செயல் அலுவலா் பா.குழந்தைவேல், திருவிழா கமிட்டியினா் செய்திருந்தனா்.