முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சாவு
By DIN | Published On : 24th October 2019 12:33 AM | Last Updated : 24th October 2019 12:33 AM | அ+அ அ- |

கோபி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கோபி அருகே கூகலூரைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (70). இவா் தனது வீட்டின் மீது போடப்பட்டிருந்த தகரக் கொட்டகை மீது சாக்குப் பையை காய போட்டிருந்தாா். இந்த சாக்குப் பையை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே பழனியம்மாள் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனியம்மாளின் சகோதரா் சென்னியப்பன் கொடுத்த புகாரின்பேரில் கோபி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.