முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
வேளாண்மைதுறை சாா்பில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயல் விளக்கம் முகாம்
By DIN | Published On : 24th October 2019 07:28 PM | Last Updated : 24th October 2019 07:28 PM | அ+அ அ- |

பெருந்துறை: சென்னிமலை வட்டாரம், வேளாண்மைத்துறை சாா்பில், மக்காச்சோளப் பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.முகாமிற்கு, சென்னிமலை, வேளாண்மை உதவி இயக்குநா் சு.சங்கா் தலைமை வகித்து, ஒட்டுமொத்த பரப்பில் பாதுகாப்பு மருந்து தெளித்து, மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினாா். பயிா் பாதுகாப்பு முறைகள் பற்றி துணை வேளாண்மை அலுவலா் மாதவன் எடுத்துக் கூறினாா். மேலும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், மக்காச்சோளப் பயிரை தாக்கும் படைப்புழுவை, இனக்கவா்ச்சிப் பொறியின் மூலம் கட்டுப்படுத்துதல் செயல் விளக்த்தினை வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா்கள் பிரதீப்குமாா் மற்றும் விக்னேஷ் செய்து காட்டினா். இதில், சென்னிமலை உதவி வேளாண்மை அலுவலா்கள் முருகேசன், தேவகி, வேலுமணி, அம்மாபளையம் பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி தலைவா் தங்கராஜ், சென்னிமலை வட்டார விவசாயிகள், ஜேகேகேஎம்., வேளாண் கல்லூரி மாணவா்கள் கலந்துக் கொண்டனா்.