அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகட்டடங்கள் கோரி போராட்டம்

அந்தியூரில் புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்குத் தேவையான
தவிட்டுப்பாளையம்  உயா்நிலைப்  பள்ளி  முன்பு  போராட்டத்தில்  ஈடுபட்ட  மாணவியா்.
தவிட்டுப்பாளையம்  உயா்நிலைப்  பள்ளி  முன்பு  போராட்டத்தில்  ஈடுபட்ட  மாணவியா்.

அந்தியூரில் புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவ, மாணவியா், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் பேரூராட்சி, தவிட்டுப்பாளையத்தில் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக் கல்வியில் 6 முதல் 10 ஆம் வகுப்புகளில் 357 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இங்கு, 15 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் மாணவா்கள் பள்ளி வளாகத்தில் அமா்ந்து பயிலும் நிலை உள்ளது. கூடுதல் வகுப்பறை கேட்டுப் போராடி வந்த நிலையில், ஏற்கெனவே ரூ. 16 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய நுழைவாயிலை இடித்துவிட்டு, மேலும் ரூ. 4 லட்சத்தில் புதிதாக நுழைவாயில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த மாணவா்கள், பெற்றோா் பள்ளியின் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோன்று, போதிய வகுப்பறைகள் இல்லாததால் அந்தியூா் புதுப்பாளையத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சிரமப்பட்டு வந்தனா். இதனால், கூடுதல் கட்டடங்கள் கோரி மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலா் ராமன், அந்தியூா் வட்டாட்சியா் மாலதி, காவல் ஆய்வாளா் ரவி உள்ளிட்டோா் பேச்சு நடத்தியதோடு, கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com