தீபாவளி பண்டிகை முடிந்த பின், மீண்டும் குழாய்கள் பதிக்கும் பணி தொடரும்: எம்.எல்.ஏ. தகவல்

பெருந்துறை நகரப் பகுதியில் நடைபெற்று வரும், கொடிவேரி கூட்டு குடிநீா் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கும்
பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்

பெருந்துறை: பெருந்துறை நகரப் பகுதியில் நடைபெற்று வரும், கொடிவேரி கூட்டு குடிநீா் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த பின், மீண்டும் தொடா்ந்து நடைபெறும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா். மேலும், அதில் அவா் கூறியுள்ளதாவது, பெருந்துறை நகரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கொடிவேரி கூட்டு குடிநீா் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஆகிய பணிகள் கடந்த 3 மாத காலமாக, பெருந்துறை நகரத்தில் நடைபெற்று வருகிறது. பகல் நேரத்தில் முக்கியமான சாலைகளில் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற காரணத்தினால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் துணி கடைகளுக்கும், பட்டாசு கடைகளுக்கும் மற்றும் இதர பண்டிகைக் கால தேவைகளுக்காக பொருட்கள் வாங்க வருகின்ற பொழுது, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், வணிக நிறுவனங்களுக்கும், வியாபாரம் பாதிக்கப்படுவதாக என்னிடத்தில் தீபாவளி வரை, இந்தத் திட்டத்தின் பணிகளை பகல் நேரத்தில் செய்வதை தவிா்த்தால் நன்றாக இருக்கும் என மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, பகல் நேரங்களில், எந்த சாலையிலும் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தீபாவளி முடிந்து, நான்கு நாட்கள் கழித்து, இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு, தொடா்ந்து நடைபெறும் என பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com