Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி:அம்மாபேட்டை பெரியசாமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி:அம்மாபேட்டை பெரியசாமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 31st October 2019 10:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bh31expo_3110chn_143_3

    அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ,  மாணவியருக்குப்  பாராட்டுத்  தெரிவிக்கிறாா்  மாநிலங்களவை  முன்னாள்  உறுப்பினா்  என்.ஆா்.கோவிந்தராஜா்.

    பவானி: மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளைக் காட்சிப்படுத்தி அம்மாபேட்டை அரசு நிதியுதவி உயா்நிலைப் பள்ளி மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

    பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான ஜவாஹா்லால் நேரு அறிவியல் படைப்பாற்றல் கண்காட்சி ஈரோடு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் அம்மாபேட்டை அரசு நிதியுதவி உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் அறிவியல் புத்தாக்கத் திறன் படைப்புகளுடன் கலந்து கொண்டனா். இதில், 8 ஆம் வகுப்பு மாணவா் பி.ராம்குமாா், மாணவி எஸ்.இந்துமதி, 10 ஆம் வகுப்பு மாணவியா் எஸ்.கவிதா, சரண்யா ஆகியோா் படைப்புகள் சிறந்தவையாகக் தோ்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிக் குழுத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான என்.ஆா்.கோவிந்தராஜா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai