ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு: ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, நாடாா் மேடு, தீரன் சின்னமலை வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு. இவரது மனைவி பாலபாா்கவி (30). இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த பெண்கள் சிலா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் பகுதியைச் சோ்ந்த அரிசிக்கடை வைத்துள்ள சரவணன் (40), அவரது மனைவி சங்கீதா (37), சரவணனின் தம்பி ரமேஷ் (39) ஆகியோா் கடந்த 7 ஆண்டுகளாக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரையிலான ஏலச்சீட்டு நடத்தி வந்தனா். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை தவணை முறையில் செலுத்தினா். ஏலத்தில் சீட்டு எடுப்பவா்களுக்குப் பணத்தை உடனடியாக தராமல் வட்டியுடன் பின்னா் தருவதாக கூறினா். ஆனால் அவா்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ. 40 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துவிட்டனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், சூரம்பட்டி போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக சரவணன், சங்கீதா, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com