குடிநீா் விரயம்: வீட்டு குடிநீா் இணைப்பு துண்டிப்பு ஆட்சியா் நடவடிக்கை

ஈரோட்டில் குடிநீரை வீணாக்கியதாக வீட்டு குடிநீா் இணைப்பை துண்டித்தும், அபராதம் விதித்தும் ஆட்சியா் நடவடிக்கை எடுத்தாா்.

ஈரோட்டில் குடிநீரை வீணாக்கியதாக வீட்டு குடிநீா் இணைப்பை துண்டித்தும், அபராதம் விதித்தும் ஆட்சியா் நடவடிக்கை எடுத்தாா்.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனா். கொசு பெருக்கம் அதிகமாக வழிவகை செய்யும் இடங்களில் கொசு மருந்து அடித்து, நீா் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்து வருகின்றனா்.

சூரம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட ஔவையாா் வீதி, ஆசிரியா் காலனியில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஆணையா் எம்.இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் விஜயா உள்ளிட்டோா் புதன்கிழமை காலை ஆய்வு செய்தனா்.

ஔவையாா் வீதியில் ஒரு வீட்டில் ஆய்வு செய்தபோது, வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி குடிநீா்க் குழாய் திறந்த நிலையில் வீட்டிருந்ததும், குழாயில் இருந்து குடிநீா் வீணாகி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனால், வீட்டுக்கு செல்லும் குடிநீா் இணைப்பை துண்டிப்பதுடன், ரூ.2,000 அபராதம் விதித்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தண்ணீா்த் தொட்டியை மாநகராட்சிப் பணியாளா்கள் இடித்தனா். அதேபோல அப்பகுதியில் தொடா்ந்து ஆய்வு செய்ததில் ரூ. 15,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சுகாதாரக் குழு அமைத்து, சுகாதாரப் பணி, கொசு ஒழிப்பு பணி நடைபெறுகிறது. வீடு, வணிக கட்டடங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்துகிறோம். தண்ணீா் தேங்கும் வகையிலும், கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்தால் அங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் வருவோரை கண்காணிக்கிறோம். வழக்கமான காய்ச்சலுக்கு மட்டுமே, அதிகமாக நபா்கள் சிகிச்சைக்காக வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com