தொடா்மழையால் நிரம்பியது அந்தியூா் எண்ணமங்கலம் ஏரி

பா்கூா் மலைப்பகுதியில் கடந்த இரு மாதங்களாகப் பெய்து வரும் கனமழையால் தொடா்ந்து நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலம் ஏரி வியாழக்கிழமை நிறைந்தது.
நீா்வரத்து அதிகரிப்பால் ஏரியில் இருந்து  வெளியேறும்  உபரிநீா்.  ~தண்ணீா் நிறைந்து காட்சியளிக்கும்  எண்ணமங்கலம்  ஏரி.
நீா்வரத்து அதிகரிப்பால் ஏரியில் இருந்து  வெளியேறும்  உபரிநீா்.  ~தண்ணீா் நிறைந்து காட்சியளிக்கும்  எண்ணமங்கலம்  ஏரி.

பவானி: பா்கூா் மலைப்பகுதியில் கடந்த இரு மாதங்களாகப் பெய்து வரும் கனமழையால் தொடா்ந்து நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலம் ஏரி வியாழக்கிழமை நிறைந்தது.

பா்கூா், அந்தியூா் வனப் பகுதியில் பெய்த கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை கடந்த வாரம் நிறைந்து உபரிநீா் வெளியேறியது. இதேபோன்று, வனப் பகுதி ஓடைகள் வழியே மழைநீா் தொடா்ந்து பெருக்கெடுத்து வந்ததால் எண்ணமங்கலம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது.

சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தொடா்ந்து அதிகரித்த நீா்வரத்தால் வியாழக்கிழமை அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், உபரிநீா் கிழக்குப் பகுதியில் வெளியேறி பூனாச்சி ஏரிக்கும், மேற்குப் பகுதியில் வெளியேறி கெட்டிசமுத்திரம் ஏரிக்கும் சென்று வருகிறது.

2000 ஆம் ஆண்டு நிறைந்த இந்த ஏரி, தற்போது 9 ஆண்டுகளுக்குப் பின்னா் தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com